search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூர்வாஞ்சல் விரைவு சாலை"

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி நகரில் விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341 கி.மீ நீளம் உடையது. லக்னோ-சுல்தான்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 731-ல் அமைந்துள்ள இந்த நெடுஞ்சாலை சவுதுசாராய் கிராமத்தில் இருந்து ஆரம்பமாகிறது. அங்கு தொடங்கி உத்தர பிரதேசம் - பீகார் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள ஹைடாரியா கிராமத்தில் முடிவடைகிறது.

    இது 6 வழிச்சாலையாக கட்டமைக்கப்பட்டு உள்ளது. வருங்காலங்களில் 8 வழிச்சாலையாக விரிவுபடுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் இந்த நெடுஞ்சாலை கட்டமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தர பிரதேசம் செல்கிறார். அங்கு பூர்வாஞ்சல் விரைவு சாலையை திறந்து வைக்கிறார். அவர் இன்று மதியம் 1.30 மணியளவில்  இந்த சாலையை திறந்து வைக்கிறார். இதையடுத்து, இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்.

    புதிதாக கட்டமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் 3.2 கி.மீ நீளத்துக்கு விமானங்கள் தரையிறங்கும் வண்ணம் விமான ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் இந்த ஓடுபாதையைப் பயன்படுத்தி விமானங்கள் தரையிறங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டரில், உத்தர பிரதேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு இது ஒரு சிறப்பு நாள். பூர்வாஞ்சல் விரைவு சாலை பிற்பகல் 1:30 மணிக்கு திறந்து வைக்கப்படுகிறது. இத்திட்டம் உத்தர பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பல நன்மைகளைக் கொண்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.

    ×