search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுபதீஸ்வரர் கோவில்"

    • கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இன்று ஆடி தெய்வத் திருமண பெருவிழா கோயிலில் நால்வர் அரங்கில் நடைபெறுகிறது.
    • முன்னதாக, கணபதி வழிபாடு நடைபெற்றது, ராஜகோபுரத்திற்கு 108 அடி உயர மாலை சார்த்தப்பட்டது.

    கரூர்:

    கரூர் ஸ்ரீமகாஅபிஷேக குழுவின் சார்பில் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் இன்று ஆடி தெய்வத் திருமண பெருவிழா கோயிலில் நால்வர் அரங்கில் நடைபெறுகிறது.

    கரூர் பசுபதீஸ்வரர் சுவாமிக்கும், அலங்காரவள்ளி, சவுந்தரநாயகி அம்பாள்களுக்கும் காலையில் ஆடி தெய்வத் திருமண பெருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமிக்கு மொய் சமர்ப்பணம் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து, தமிழிசை பாடல்கள், சொற்பொழிவு, பரதநாட்டியம், ஒயிலாட்டம், ஈசன், வள்ளி கும்மி, பல்வேறு இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு நடன நிகழ்ச்சி, சுவாமி, அம்மன் திருக்கல்யாண கோலத்தில் திருவீதிஉலா, வாணவேடிக்கை, சிவசக்தி காட்சி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    முன்னதாக, கணபதி வழிபாடு நடைபெற்றது, ராஜகோபுரத்திற்கு 108 அடி உயர மாலை சார்த்தப்பட்டது. தொடர்ந்து கரூர் பசுபதீஸ்வரர் கோயிலிலிருந்து பெண் வீட்டு சீர் அழைக்க மேட்டுத்தெரு அபயபிரதான அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சென்று மீண்டும் பசுபதீஸ்வரர் கோயில் திரும்பினர். தொடர்ந்து மாப்பிள்ளை பெண் வீடு புகுதல், சீர்த்தட்டு அழைத்தல், சிறப்பு உபசரணைகள், தீபாராதனை நடைபெற்றது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமகாஅபிஷேக குழு தலைவர் ஏ.கே.பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் எஸ்.கார்த்திகேயன், பி.ரமேஷ், எம்.செல்வராஜ், என்.பழனிவேல் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

    ×