search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசலைக்கீரை காளான் குழம்பு"

    • அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையை தரக்கூடியது காளான்.
    • காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.

    சைவ உணவுகளிலேயே அசைவ உணவின் சுவைக்கு ஈடான சுவையைத் தரக்கூடியது தான் காளான். அத்தகைய காளானில் உடலுக்கு தேவையான எண்ணற்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் நீரிழிவு நோயாளிகள் காளானை அதிகம் சாப்பிடுவது நல்லது. அத்தகைய காளானுடன், சத்துக்கள் அதிகம் நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து ஒரு குழம்பு செய்தால், மிகவும் அலாதியான சுவையில் குழம்பானது இருக்கும். இப்போது பசலைக்கீரை காளான் குழம்பின் செய்முறையை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பட்டன் காளான் - 15

    வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)

    சீரகம் - 1 டீஸ்பூன்

    மல்லி தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தண்ணீர் - 1/2 கப்

    அரைப்பதற்கு

    பசலைக் கீரை - 1 கட்டு (கழுவி நறுக்கியது)

    இஞ்சி - 1 இன்ச்

    பச்சை மிளகாய் - 2

    பட்டை - 1

    ஏலக்காய் - 4

    கிராம்பு - 4

    அன்னாசிப்பூ - 1

    கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)

    செய்முறை:

    முதலில் பட்டன் காளானை நன்கு நீரில் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு நன்கு கெட்டியான பேஸ்ட் போல், தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

    அதன்பிறகு நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்த்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு பசலைக்கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

    அடுத்து மல்லி தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் ஊற்ற, தட்டு கொண்டு மூடி 7-8 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். காளான் நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பரான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி.

    ×