search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீலகிரி பூண்டு"

    • நீலகிரி பூண்டுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
    • நீலகிரியில் முதல் போகத்தில் அறுவடையாகும் பூண்டு, சமையலுக்கு மட்டும் உகந்தது.

    அரவேணு:

    கோத்தகிரி அருகே கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, மிளிதேன் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பூண்டுகளை பயிரிட்டு வருகின்றனர். நீலகிரியில் விளையும் வெள்ளை பூண்டு அதிக காரத்தன்மை, மருத்துவ குணம் கொண்டது. எனவே நீலகிரி பூண்டுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

    கோத்தகிரியில் அடிக்கடி சாரல் மழை பெய்வதால், பூண்டு பயிர்கள் தற்போது செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளன. இதற்கு போதிய கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து கேத்தி பாலாடாவை சேர்ந்த விவசாயி சிவகுமார் கூறுகையில், நீலகிரியில் முதல் போகத்தில் அறுவடையாகும் பூண்டு, சமையலுக்கு மட்டும் உகந்தது. 2-ம் போகத்தில் அறுவடையாகும் பூண்டு விதைக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே 2-ம் போகத்தில் விளையும் பூண்டு விதைகளை, நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    நீலகிரி பூண்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.30 மட்டுமே கொள்முதல் விலை கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் நடவு செய்யப்பட்ட பூண்டுக்கு, தற்போது ரூ.120 முதல் ரூ.140 வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. நீலகிரி பூண்டுக்கான கொள்முதல் விலை உயர்ந்து உள்ளதால், விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    ×