என் மலர்
நீங்கள் தேடியது "நாக்பூர் வெள்ளம்"
- நாக்பூர் விமான நிலைய பகுதியில் இன்று காலை 5.30 மணி வரை 10.6 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்பஜாரி ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் அதனை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
நாக்பூர்:
மகாராஷ்டிராவில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்த நிலையில் நாக்பூர் நகரில் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாமல் கொட்டிய இந்த மழையால் நாக்பூர் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. அந்த நகரில் உள்ள அம்பஜாரி ஏரி நிரம்பியது.
பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் கடும் தவிப்புக்குள்ளானார்கள். நாக்பூரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் அனைத்திலும் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.
சாலைகளில் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
நாக்பூர் விமான நிலைய பகுதியில் இன்று காலை 5.30 மணி வரை 10.6 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, நாக்பூர் நகரில் மழை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்பஜாரி ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் அதனை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நகரின் பிற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் சிக்கியுள்ள மக்களை மீட்க பல குழுக்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது என்றார்.
நாக்பூரில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடக்கிறது. நள்ளிரவு முதல் பெய்த மழை அந்நகர மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
இதற்கிடையே நாக்பூர் பண்டாரா, கோண்டியா மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.






