என் மலர்
நீங்கள் தேடியது "தெற்காசிய தடகளம்"
- போட்டியின் முடிவில் இந்தியா 20 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 58 பதக்கங்களை பெற்று முதல் இடத்தை பிடித்தது.
- நேபாளத்துக்கு 6 பதக்கமும், வங்கதேசத்துக்கு 3 பதக்கமும், மலேசியாவுக்கு 1 பதக்கமும் கிடைத்தன.
ராஞ்சி:
4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் இந்தப் போட்டிகள் முடிவடைந்தன. கடைசி நாளில் இந்தியாவுக்கு மேலும் 8 தங்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், பெண்களுக்கான உயரம் தாண்டுதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் கிடைத்தது.
400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை ஒலிம்பா ஸ்டெபி 1 நிமிடம் 00.21 வினாடியில் கடந்து வெண்கல பதக்கம் பெற்றார். அவர் ஏற்கனவே 2 பதக்கம் பெற்று இருந்தார்.
போட்டியின் முடிவில் இந்தியா 20 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 58 பதக்கங்களை பெற்று முதல் இடத்தை பிடித்தது. இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலம் ஆக மொத்தம் 40 பதக்கத்துடன் 2-வது இடத்தை பிடித்தது.
நேபாளத்துக்கு 6 பதக்கமும், வங்கதேசத்துக்கு 3 பதக்கமும், மலேசியாவுக்கு 1 பதக்கமும் கிடைத்தன.
- 4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
- இதில் 86 பேர் (44 வீரர்கள் , 42 வீராங்கனைகள்) கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில் 86 பேர் (44 வீரர்கள் , 42 வீராங்கனைகள்) கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அதன் விவரம்:-
ஆண்கள்: மனவ் (110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்டுதல்), தினேஷ் (டிரிபிள் ஜம்ப்), தமிழ் அரசு (4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), சரண் (4X400).
பெண்கள்: ஒலிம்பா ஸ்டாபி (400 மீட்டர், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்), நந்தினி (100 மீட்டர் தடை தாண்டுதல்), கோபிகா (உயரம் தாண்டுதல்), பவானி யாதவ் (டிரிபிள் ஜம்ப்), சுபாதர்ஷினி (4X100 மீட்டர்).






