என் மலர்
விளையாட்டு

தெற்காசிய சீனியர் தடகளம்: தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு
- 4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
- இதில் 86 பேர் (44 வீரர்கள் , 42 வீராங்கனைகள்) கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
4-வது தெற்காசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில் 86 பேர் (44 வீரர்கள் , 42 வீராங்கனைகள்) கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அதன் விவரம்:-
ஆண்கள்: மனவ் (110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்), ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்டுதல்), தினேஷ் (டிரிபிள் ஜம்ப்), தமிழ் அரசு (4X100 மீட்டர் தொடர் ஓட்டம்), சரண் (4X400).
பெண்கள்: ஒலிம்பா ஸ்டாபி (400 மீட்டர், 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டம், 4x400 மீட்டர் தொடர் ஓட்டம்), நந்தினி (100 மீட்டர் தடை தாண்டுதல்), கோபிகா (உயரம் தாண்டுதல்), பவானி யாதவ் (டிரிபிள் ஜம்ப்), சுபாதர்ஷினி (4X100 மீட்டர்).
Next Story






