search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் மலைக்கோட்டை"

    • வரலாற்று சிறப்புமிக்க பழமையான கோட்டைகள் இரவு நேரங்களில் தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்வதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை செய்து வருகிறது.
    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டைக்குச் செல்ல ஆகஸ்ட் 5 முதல் 15-ந்தேதி வரை நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

    திண்டுக்கல்:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கோலகலமாகக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அனைத்துத்துறைகளின் பங்களிப்பும் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுதந்திரப் போராட்டத்தில் தொடர்புடைய ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கையை ரெயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது.

    அதேபோல் வரலாற்று சிறப்புமிக்க பழமையான கோட்டைகள் இரவு நேரங்களில் தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்வதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை செய்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மழைக்கோட்டையின் நுழைவுச் சுவரில் மின் விளக்குள் மூலம் மூவர்ணங்கள் ஒளிவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

    திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு செல்வதற்கு உள்நாட்டு பார்வையாளர்களுக்கு 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை இந்த நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. பார்வையாளர்கள் கட்டணமின்றி செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×