search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைதீபாவளி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி என்றாலே மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும்.
    • தலை தீபாவளி என்பதோ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வரும்.

    தீபாவளி என்றாலே நமது மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும். தீபாவளி எப்படா வரும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே வாங்கி வச்ச புத்தாடையை எப்படா போடலாம்னு எல்லாரும் ஏங்கிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாருடைய ஏக்கமும் ஒரு பக்கம் இருந்தால், தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்க தானே செய்யும். தீபாவளி என்பது வருடா வருடம் வரக்கூடியது. ஆனால் தலை தீபாவளி என்பதோ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வரக்கூடியதாகும். இந்த தலை தீபாவளி நமது தமிழகத்தில் மிக மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

    திருமணமாகி முதல் ஆண்டில் வரும் தீபாவளியே தலை தீபாவளியாக தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது! திருமணத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பண்டிகைகளும் மணமகனின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் கொண்டாடப்படுவது மற்றுமொரு சிறப்பு. புதிதாக மணமுடித்த மணமக்களை தீபாவளிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே பெண்ணின் பெற்றோர் அவர்களது வீட்டிற்குச் சென்று சீர் வரிசை (வெற்றிலை, பூ, பழங்கள், இனிப்புகள், ஆடைகள்) வைத்து தலை தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைப்பர்.

    அதன்படி மணமக்களும் தீபாவளிக்கு முன் தினமே பெண்ணின் வீட்டிற்குச் செல்வர்.தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடை களில் மஹா விஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படு வதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்..

    பூஜைகள் செய்து, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் இனிப்புகள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்பத்தாருடன் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர். மணமகன் தன் மனைவியின் குடும்பத்தாருடன் தீபாவளியை கொண்டாடுவது தான் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தலை தீபாவளி. பெண் எடுத்த வீட்டில் மணமகனும் ஒரு அங்கத்தினர் தான் என்பதை கூறும் வகையிலும், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அனுப்பிய சம்பந்தி வீட்டிற்கு தீபாவளி அன்று தனது மகனை உங்களது மகனாக ஏற்றுக் கொள்ளும்படியாக அனுப்பி வைத்து பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டிக் கொள்வதும் இந்த தலை தீபாவளியின் வழக்கமாகும்.

    தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரி யோரை வணங்கி வாழ்த்து பெறுவர். உறவு பாராட்டும் தீபாவளியை நாமும் கொண்டாடுவோம்.

    ×