என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்காப்பு கலை போட்டி"

    • சிலாட் சாம்பியன்ஷிப் தற்காப்பு கலை போட்டி எஸ்.எம். ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.
    • 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி பென்காக் சிலாட் அசோசியேஷன் நடத்திய மாவட்ட அளவி லான பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் தற்காப்பு கலை போட்டி எஸ்.எம். ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

    இந்த கல்லூரியின் முதல்வர் கோவிந்தராஜன், நேதாஜி ஆகியோர் தலைமை ஏற்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தருமபுரி பென்காக் சிலாட் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார், செயலாளர் லட்சுமணன், பொருளாளர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    20-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டி யில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் அடுத்த நடக்க இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியு ள்ளனர்.

    ×