search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருமபுரியில் மனித சங்கிலி போராட்டம்"

    • பல்வேறு கட்சிகள் சார்பில் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
    • முன்னதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி,

    தமிழகத்தில் நேற்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர், மனிதநேய ஜனநாயக கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் கூட்டாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி தருமபுரியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில், சட்டமன்ற தொகுதி செயலாளர் சக்தி (எ) சமத்துவன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

    இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு சார்பில் மாவட்டத்திற்கு அரசு முறை பயணமாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை, பூண்டி கலைவாணன் ஆகியோர் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்புள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் செய்தியாளரிடம் பேட்டி அளித்த போது:-

    ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பலும்,பா.ஜ.க.வும் நாட்டை கூறு போட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் இத்தகைய மக்கள் விரோத சக்திகளுக்கு எதிராக தேசத்தை நேசிக்கிற அரசியல் அமைப்பு சாசனத்தை நம்புகிற அத்தனை ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து தமிழகத்தில் மனித சங்கிலி பேரணியை நடத்திக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த மனித சங்கிலி போராட்டத்தில் செய்தி தொடர்பாளர் பாண்டியன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டை கலைவாணன், தருமபுரி 30 -வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி உமாசங்கர், மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.

    கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கைகளை கோர்த்தபடி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×