search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிகள்"

    • ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • ஜல் சக்தி துறை மத்திய இணை மந்திரி பிரஹலாத் சிங் படேல் கலந்து கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் ஜல் சக்தி துறை மத்திய இணை மந்திரி பிரஹலாத் சிங் படேல் தலைமையில் கலெக்டர் முரளிதரன், ரவீந்திரநாத் எம்.பி. ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்டத்தி லுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் ஊராட்சிகள், உட்கடை கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை, இதுவரை ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடியிரு ப்புகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள், நிலுவையிலுள்ள குடியிருப்புகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய குடியிருப்புகளின் எண்ணிக்கை குறித்தும்,

    உணவுபதப்படுத்தும் தொழில்கள் துறை சார்பில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் அரசின் மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்ட பயனாளி களின் எண்ணிக்கை, நிலுவை யிலுள்ள பயனாளி களின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு மே ற்கொண்டு, தெரிவித்ததாவது:-

    கிராமப்புறப்பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான குடிநீர் தேவையினை பூர்த்தி செய்கின்ற வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புற குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்புகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள 1,85,315 ஊரக குடியிருப்புகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.106.74 கோடி மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட 1,32,207 குடியிருப்புகள் போக மீதம் ஆண்டிபட்டி மற்றும் க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.77.26 கோடி மதிப்பீட்டில், வழங்கப்பட உள்ள 53,108 குடியிருப்புகளுக்கு 31.03.2023-க்குள் இணைப்பு வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதனைப்போன்று விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் மத்திய அரசின் நிதியுடன் நுண்ணீர் பாசனத்திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், உணவுபதப்படுத்தும் தொழில்கள் துறை சார்பில் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்திற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி 90 பயனாளிகளுக்கு வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 87 பயனாளி களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டு இலக்கு அடையப்பட்டுள்ளது.

    கோட்டூரில் 14 கோடி மதிப்பிலான 5000 மெ.டன் அளவுள்ள குளிர்சாதன கிட்டங்கி, 2500 மெ.டன் அளவுள்ளகிட்டங்கி 80 மெ.டன் அளவிலான வாழை பழுக்க வைக்கும் அறை கொண்ட வேளாண் பதப்படுத்தும் தொகுப்பு கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    முன்னதாக பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூரில் செயல்பட்டு வரும் கேரளா ஏலக்காய் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் ஏலக்காய்தரம் பிரிக்கும் மற்றும் மதிப்பு கூட்டும் எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவின் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, மாவட்ட ஊராட்சித்தலைவர்.பிரிதா, துணைத்தலைவர் ராஜபாண்டியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×