search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதியிடம் விருது"

    • 128 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
    • 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடகங்களை நிகழ்த்தி வந்துள்ளார்.

     தொப்பூர்,

    புதுடெல்லியில் இசை, நடனம், நாடகம், பாரம்பரியம், நாட்டுப்புற மற்றும் பொம்மலாட்டம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 128 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் ஒருவர் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 75).

    இவர் சுமார் 50 வருடங்களுக்கு மேல் தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திர, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கூத்து நாடகங்களை நிகழ்த்தி வந்துள்ளார்.

    கோமாளி வேடம் தொடங்கி அரசர் வேடம் முதல் அசுரர் வேடம் வரை அன்றைய காலகட்டத்தில் நடந்த படியே தற்போதுள்ள மக்களுக்கும் எளிய வகையில் புரியும் அடிப்படையில் தன் திறனை வெளிப்படுத்தி தெருக்கூத்துகளை நடத்தி வந்துள்ளார்.

    இவரின் இந்த நாடக திறமையின் காரணமாக ஏற்கனவே கலைமுது மணி விருது வாங்கியுள்ள நிலையில் தற்போது மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதை பெற்றுள்ளார்.

    தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர்களை கவுரவிக்கும் வகையிலும், அவர்கள் திறமையை போற்றும் வகையிலும் ஜனாதிபதி தெருக்கூத்து கலைஞர் திறமையை பாராட்டி வழங்கிய விருதுபெருமை அடையச் செய்துள்ளது.

    ×