search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்"

    ஆலத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு 100 நாள் வேலை கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பாடாலூர்:

    ஆலத்தூர் ஒன்றிய அலுவலகம்  முன்பு அனைவருக்கும் 100 நாள் வேலை கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜன நாயக மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கலையரசி, விவசாய தொழிலாளர்சங்க  மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஜனநாயக மாதர் சங்க மாநில துணைத் தலைவர் கீதா, விவசாய தொழிலாளர் சங்க மத்தியகுழு  உறுப்பினர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆர்ப்பாட்டத்தில் புதுக்குறிச்சி, காரை, தெரணி, சமத்துவபுரம்  மக்களுக்கு100  நாள் வேலைவாய்ப்பை உடனடியாக வழங்க வேண்டும், 100 நாள்வேலை வாய்ப்பை 200  நாளாக உயர்த்திட வேண்டும், அனைவருக்கும் வேலைக்கான அட்டை வழங்கிட வேண்டும், வேலை செய்தவர்களுக்கு சம்பள பாக்கியை உடனடி யாக வழங்க வேண்டும், முதியோர்,விதவை, கணவ ரால் கைவிடப்பட்டவர் ,மாற்றுத்திறனாளிகளுக் கான ரூ.1000 உதவித் தொகை யை   உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பத்மாவதி,  பெரம்பலூர் ஒன்றியச்  செயலாளர் வசந்தா , ஆட்டோ சங்க மாநிலக் குழு உறுப்பினர் சண்முகம், மாவட்டச் செயலாளர் ரெங்கநாதன்,மாவட்ட துணைச் செயலாளர்மல்லிஸ் குமார் உள்ளிட்ட ஜனநாயக மாதர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள்கலந்து கொண்டனர். புதுக் குறிச்சி கிளைசெயலாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.
    ×