search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்பருத்தி பூ ஃபேஸ்பேக்"

    • சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பெரும் தொல்லையாக இருக்கின்றது.
    • இயற்கையிலேயே பல பொருட்கள் நம் அழகை பாதுகாப்பதற்கு உள்ளன.

    இன்று பலருக்கும் சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பெரும் தொல்லையாக இருக்கின்றது. அதற்கு என்ன செய்யலாம் என யோசித்து யோசித்து பல ரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை உபயோகிக்கிறோம்.

    ஆனால், இயற்கையிலேயே பல பொருட்கள் நம் அழகை பாதுகாப்பதற்கு உள்ளன. அவற்றில் ஒன்று செம்பருத்தி பூ. செம்பருத்தியைக்கொண்டு எவ்வாறு சருமத்தை பாதுகாக்கலாம் எனப் பார்ப்போம்...

    தேவையானபொருட்கள்

    மைசூர் பருப்பு- 25 கிராம்

    பாதாம்- 25 கிராம்

    செம்பருத்தி பூ- 10

    தயிர்- ஒரு ஸ்பூன்

    விட்டமின் ஈ கேப்ஸ்யூல்- 1

    தேன் ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    மைசூர் தால் பருப்பு மற்றும் பாதாம் இவற்றை ஒரு மிக்சி ஜாரில் பொடித்துக்கொள்ள வேண்டும். அதனை தனியாக ஒரு டப்பாவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதே மிக்சி ஜாரில் செம்பருத்தி பூ மற்றும் தயிர், ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். அந்த பேஸ்ட்டில் ஒரு விட்டமின் ஈ கேப்ஸ்யூல் எண்ணெய் சேர்க்க வேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள பாதாம், மைசூர் பருப்பு பொடி மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து ஃபேஸ் பேக் அளவுக்கு கலந்துகொள்ள வேண்டும்.

     இந்த செம்பருத்து ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை தடவி அரைமணிநேரம் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளிச்சென்று பொலிவாக இருக்கும். இதையே தொடர்ந்து பயன்படுத்தி வரும் போதும் நல்ல மாற்றத்தை நீங்களே உணரலாம்.

    பொதுவாக மலர்களின் நிறம் என்பது நறுமணத்தை மட்டும் கொண்டிருக்காது. வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்களையும் கொண்டுள்ளது. இந்த ஃபேஸ் பேக் உங்கள் கன்னங்களை இளஞ்சிவப்பு நிறத்தில் வைக்கும் என்பதை உணர்வீர்கள்.

    ×