search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செங்கல்பட்டு நீதிமன்றம்"

    • 2012-ம் ஆண்டு பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து மாணவி உயிரிழந்தது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த சேதுமாதவன் பிரியா தம்பதியின் குழந்தை ஸ்ருதி ஜியான் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். 2012-ம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி பள்ளி சென்று வீடு திரும்பும் வழியில் முடிச்சூர் சாலையில் பள்ளி பேருந்தில் ஓட்டையில் விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி ஸ்ருதி உயிரிழந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் பேருந்திற்கு தீ வைத்தனர்.

    பேருந்து எப்.சி. முடிந்து ஒரு மாதம் கூட முழுமையாக முடியாத நிலையில் இந்த சம்பவம் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து பள்ளி மாணவி ஸ்ருதி உயிரிழந்த சம்பவத்தில் கைதான அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×