search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுருளி அருவி வறண்டது"

    • சுருளி அருவிக்கு அரிசிப்பாறை, ஈத்தப்பாறை மற்றும் ஹைவேவிஸ், தூவானம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.
    • தண்ணீர் வரத்து இல்லாததால் சுருளி அருவிக்கு குளிப்பதற்காக வந்து ஏமாற வேண்டாம் என வனத்து றையினர் தெரிவித்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சுருளி அருவி. அரிசிப்பாறை, ஈத்தப்பாறை மற்றும் ஹைவேவிஸ், தூவானம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட நாட்க ளில் மூதாதைய ர்களுக்கு தர்பணம் கொடுக்க சுருளி அருவிக்கு வருகின்றனர். மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் அருவியில் புனித நீராடி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது.

    இந்த நிலையில் தற்போது தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அருவி வறண்டு காணப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள், பக்தர்கள் சுருளி அரு விக்கு குளிப்பதற்காக வந்து ஏமாற வேண்டாம் என வனத்து றையினர் தெரிவித்து ள்ளனர். நீர்வரத்து தொடங்கியதும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

    ×