search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறந்த கைவினை கலைஞர்"

    • கொரோனா தொற்று காலத்தில் இந்த விருதுகள் வழங்கப்படவில்லை.
    • கடந்த மூன்று வருடங்களுக்கான விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன.

    மத்திய ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் பொருளாதாரத்தில் கைவினைத் துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இந்த துறை மூலம் கிராமப் புறங்களிலும் சிறு நகரங்களிலும் பெருமளவிலான கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

    கைவினைத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை கைவினை பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகம் செயல்படுத்தி வருகிறது. 2002 ஆம் ஆண்டு ஷில்ப் குரு விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

    கொரோனா தொற்று காலத்தில் இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். மத்திய ஜவுளித்துறைஅமைச்சர் பியூஷ் கோயல் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். கடந்த மூன்று வருடங்களில் தேர்வு செய்யப்பட்டிருந்த சிறந்த கைவினை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×