search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம்"

    • தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம் பழனியில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

    பழனி:

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் ஆலோசனை கூட்டம் பழனியில் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தீபாவளியையொட்டி தமிழகத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். இதனால் பட்டாசு வியாபாரம் பெரும் சரிவு ஏற்படும். அதை நம்பியுள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். தற்போது நிலையில் ஆன்லைன் வணிகத்தை தடுக்க முடியாது. அதே நேரத்தில் சிறு வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வணிகத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

    வியாபாரிகளின் கோரிக்கையை அரசுக்கு கொண்டு செல்லவே தமிழகம் முழுவதும் வியாபாரிகள் சந்தித்து வருகிறோம். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்ப்பரேட் கைகளில் வணிகம் சிக்க கூடாது. அரிசி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விதிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×