search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேப்டவுன்"

    • இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 1-2 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
    • கேப்டவுன் அணிக்கு தலைமை பயிற்சியாளாராக மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

    அந்த வகையில் ஜோகன்னஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.

    ஐ.பி.எல். போன்றே தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்கிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் காண அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

    இந்நிலையில் கேப்டவுன் அணிக்கு தலைமை பயிற்சியாளாராக மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தற்போது தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவர் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு பதவியில் இருந்து விலக உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 1-2 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புரமோட்டர்ஸுக்குச் சொந்தமான 3 நிறுவனங்களுடனும் பவுச்சர் ஒரு லாபகரமான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதால் தான் இவர் தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தென் ஆப்பிரிக்கா டி20 லீக் போட்டியில் கேப்டவுன் அணியின் பயிற்சியாளராகவும், 2023 ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சர்வதேச லீக் டி20-ல் எம்ஐ எமிரேட்ஸ் உடன் இணைய உள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×