என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தை முகம்"
குன்னூரில் நிலாவில் பாபா முகம் தெரிந்ததாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று இரவு நிலாவில் பாபாவின் முகம் தெரிவதாக தகவல் வெளியானது. இதனால் குன்னூர் நகர பகுதியை சேர்ந்த காமராஜர்புரம், ராக்பி, ரெய்லி காம்பவுண்டு, மாடளம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இரவு 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
அவர்கள் நிலாவை பார்த்து கொண்டு இருந்தனர். சிலர் டெலஸ்கோப் வழியாகவும் மற்றும் சிலர் கண்ணாடி அணிந்தும் நிலாவை பார்த்தனர்.
அப்போது ஒரு சிலர் நிலாவில் பாபா முகம் தெரிவதாக கூறி வணங்கினார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் பொதுமக்கள் நிலாவை பார்த்து கொண்டு இருந்தனர்.
பின்னர் மேகமூட்டம் ஏற்பட்டதால் நிலாவை காண முடியவில்லை. இந்த சம்பவம் காரணமாக குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.