search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைந்த பெரியாறு அணை நீர்மட்டம்"

    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் தேனி மாவட்ட குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • மழை கைகொடுக்கும்பட்சத்தில் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர்தட்டுப்பாடை சமாளிக்கமுடியும்.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதரமாக உள்ளது. 152அடி உயரம் உள்ள அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    கடந்த ஜனவரி மாதத்தில் அணையின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்ந்தது. அதனைதொடர்ந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சீராக குறைந்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் 22 அடி வரை நீர்மட்டம் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.75 அடியாக உள்ளது.

    அணைக்கு 48 கனஅடிநீர் வருகிறது. 467 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் தேனி மாவட்ட குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் நேற்று சாரல் மழை பெய்தது. இருந்தபோதும் நீர்வரத்து குறைவாகவே உள்ளது. எனவே மழை கைகொடுக்கும்பட்சத்தில் மட்டுமே கோடைகாலத்தில் குடிநீர்தட்டுப்பாடை சமாளிக்கமுடியும்.

    வைகை அணையின்நீர்மட்டம் 54.59 அடியாக உள்ளது. 292 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. 25 கனஅடிநீர் வருகிறது. 65 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 43.62 அடியாக உள்ளது. 16 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    ×