search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா"

    கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.
    ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. ரஜாக் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார்.

    கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் உள்ளிட்ட பிரம்மாண்ட இயக்குனர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மேலும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

    இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், 'பவர்ஸ்டார்' சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

    இப்படம் இந்த வாரம் (மே 25) வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள். தற்போது சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×