search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளான் டிக்கா"

    • அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் காளான் டிக்கா.
    • ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும் காளான் டிக்கா. இந்த ரெசிபியை இன்று நாம் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    டிக்கா என்று சொல்லும் போது சிக்கன் டிக்கா, க்ரில்ட் சிக்கன் டிக்கா, தந்தூரி சிக்கன் டிக்கா என்று பல விதமான சிக்கன் டிக்காகளை வெளியில் ரெஸ்டாரண்ட்களில் சாப்பிட்டு இருப்பீர்கள். அந்த வரிசையில் இன்று நாம் டிக்கா ரெசிபிக்களில் ஒன்றான காளான் டிக்கா ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்:

    காளான் - 1 பாக்கெட்

    கெட்டித்தயிர் - 1/2 கப்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

    தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - சிறிதளவு

    உப்பு - தேவைக்கேற்ப

    எலுமிச்சை சாறு - 1/2

    எண்ணெய் - சிறிதளவு.

    செய்முறை:

    ஒரு பவுலில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். கலந்து வைத்த இந்த கலவையில் கழுவி வைத்த முழு காளான் மற்றும் நறுக்கி வைத்த வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    ஊறிய காளானை டிக்கா குச்சியில் முதலில் குடை மிளகாய், பிறகு வெங்காயம், அதன் பிறகு காளான் என அடுக்கடுக்காக அடுக்கிக் கொள்ளவும். பிறகு இதனை 10 நிமிடம் அப்படியே வைக்கவும்.

    தோசைக்கல்லை சூடு செய்து, அதில் சிறிது எண்ணெய் தேய்த்து மிதமான தீயில் காளான்களை சேர்த்து ஒவ்வொரு மூன்று நொடிக்கு ஒரு தடவை திருப்பி போட்டு, 15 நிமிடம் மசாலா வற்றி காளான் வெந்தவுடன் எடுத்தால் சுவையான காளான் டிக்கா தயார்.

    ×