என் மலர்
நீங்கள் தேடியது "கார் எரிந்தது"
- ஆனந்த பெருமாள் 4 நாட்களுக்கு முன்பு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கி வந்துள்ளார்.
- காற்றின் காரணமாக காரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, காரின் முன்பகுதி முழுவதும் எரிந்தது.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சமத்துவபுரம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பெருமாள். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அந்த காரில் அவர் சமத்துவபுரத்தில் இருந்து நாசரேத் நோக்கி தனது காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அந்த காரில் முன்பக்கத்தில் இருந்து புகை வெளிவந்துள்ளது. உடனே அவர் காரை நிறுத்தி கீழே இறங்கி பார்த்துள்ளார். அப்போது காரில் தீ எரிய தொடங்கியுள்ளது. காற்றின் காரணமாக காரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, காரின் முன்பகுதி முழுவதும் எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் மற்றும் சாத்தான்குளம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க போராடினர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






