search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காபி பூக்கள்"

    • ஏற்காடு காபி என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு.
    • கடந்த சில ஆண்டுகளாக மழை சரியான அளவு பெய்யாததால் காபி விளைச்சல் வெகுவாக குறைந்தது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில், முக்கிய விவசாயமாக காபி கருதப்படுகிறது. ஏற்காடு காபி என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு.

    இந்தாண்டு காபி எஸ்டேட்டுகளில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன. வெள்ளை நிறத்தில் மல்லிகை மலர் போல தோட்டங்களில் பூத்துள்ள காபி மலர்களை அந்த வழியாக செல்பவர்கள் நின்று பார்த்து ரசித்து செல்கின்றனர். மேலும் இந்த மலர்களில் இருந்து ஒரு வித நறுமணமும் வீசுகிறது.

    வருடத்தில் 2 முறை காபி சீசன் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக மழை சரியான அளவு பெய்யாததால் காபி விளைச்சல் வெகுவாக குறைந்தது. இதுதவிர உரிய விலை கிடைக்காததாலும் காபி எஸ்டேட் அதிபர்கள் மற்றும் காபி தோட்ட சிறு வியாபாரிகளும் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் காபி செடிகளில் பூக்கள் அதிகம் பூக்க தொடங்கி உள்ளது. இதனால் இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரிக்கும் என்று காபி எஸ்டேட் அதிபர்கள், சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×