search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் குற்றச்சாட்டு"

    • பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பல ஆயிரம் கோடிகள் கடன் வாங்கி உள்ளன.
    • புண்ணியமூர்த்தி, நகர நிர்வாகிகள் ருத்திரமூர்த்தி,செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதானியின் பல நிறுவனங்கள் எஸ்பிஐ,, எல்ஐசி .,போன்ற பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பல ஆயிரம் கோடிகள் கடன் வாங்கி உள்ளன. உண்மைக் கணக்குகள்படி இந்த பெருங்கடன்களை திருப்பிக் கட்டவே முடியாத நிலையில் தான் இந்த நிறுவனங்கள் உள்ளன.

    எந்த நேரமும் இவை திவால் ஆகலாம் .அதானியின் பல நிறுவனங்களுக்கு தொலைபேசி எண் , முகவரி, சரிபார்க்க முடியவில்லை.தங்களுக்குள்ளேயே அதானி நிறுவனங்கள் கடன் கொடுத்துக் கொள்வதால்,ஒரு நிறுவனம் திவால் ஆனால் அதற்கு கடன் கொடுத்த மற்ற 10 நிறுவனங்களும் கூடவே உடன்கட்டையாக திவால் ஆகும் நிலை உள்ளது.

    குஜராத் கலவரத்தில் எப்படி யாருமே தண்டனை அனுபவிக்கவில்லையோ, அதே போல் இதிலும் யார் குற்றவாளி என்று கண்டு பிடிக்க முடியாதவாறு ஒரு சாதுர்யம் செய்துள்ளார் அதானி.

    தனது நிறுவனங்களுக்கு சட்டத்தின் கண்களில் யார் உரிமையாளர் என்று கண்டுபிடிக்க முடியாத அளவு தலை சுற்றும் அளவு குறுக்கும் நெடுக்கும் கம்பெனிகளை உலகமெங்கும் உருவாக்கி, இந்த நிறுவனம் ஏதாவது சட்டச்சிக்கலில் மாட்டிக் கொண்டால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாதவாறு பார்த்துக் கொள்வது இதன் செயல்பாடு ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது பல்லடம் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயல்தலைவர் மணிராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் செம்மிபாளையம் புண்ணியமூர்த்தி, நகர நிர்வாகிகள் ருத்திரமூர்த்தி,செந்தில் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×