search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர் உண்ணாவிரதம்"

    • திருப்பத்தூரில் கவுன்சிலர் உண்ணாவிரதம்
    • திருப்பத்தூரில் கவுன்சிலர் உண்ணாவிரதம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சி 36- வது வார்டு விடுதலை சிறுத் தைகள் கட்சி கவுன்சிலர் மு.வெற்றி கொண்டான் நேற்று திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார்.

    அங்கு 36-வது வார்டு பகுதி யில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் ரேசன் கடை, அங்கன்வாடி, பள்ளி கூடுதல் கட்டிடங்கள் கட்ட இடங் களை அளவீடு செய்து தரக் கோரி நகராட்சி நகரமைப்பு அலுவலர் கவுசல்யாவை சந் தித்து மனு கொடுத்தார்.

    அதற்கு அவர் அலட்சிய மாக பதில் அளித்ததாகவும், நகராட்சியில் தற்காலிகமாக பணிபுரியும் உதவியாளரை அல்லது ஆணையாளரை, தாசில்தாரை பார்க்கும்படி கூறியதாகவும் தெரிகிறது. இத னால் ஆத்திரம் அடைந்த வெற்றிகொண்டான், நக ராட்சி தலைவர் அறையின் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவருக்கு ஆதரவாக விடு தலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் விடு தலை சிறுத்தைகள் கட்சியி னர் உண்ணாவிரதபோராட் டத்தில் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆணையாளர் ஜெய ராமராஜா, கவுன்சிலர் வெற் றிகொண்டானிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது கவுன்சிலர் வெற்றி கொண்டான் கூறுகையில், "பொதுமக்கள் சார்பாக நான் வந்து கோரிக்கைகளை தெரி வித்தால், நகரமைப்பு அலுவ லர் அலட்சியமாகபதில் கூறு கிறார். வீடுகள் கட்ட பொது மக்கள் விண்ணப்பித்தால் நான்கு என்ஜீனியர்களை பார்க்கக் கூறுகிறார்.

    எனது வார்டில் தாழ்த்தப் பட்ட, பட்டியல் இனத்தவர் கள் உள்ளார்கள். குடிசை வீடுகள் உள்ளது. ஆகையால் எனது வார்டை அவர் புறக்க ணிக்கிறார். நிலம், மனை பிரி வுகளுக்கு மட்டும் உடனடி யாக சர்வேயரை அழைத்து செல்கிறார் உள்ளிட்ட பல் வேறு குற்றச்சாட்டுகளை கூறி, உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும்" என வலியுறுத்தினார்.

    அதற்கு நகராட்சி ஆணையா ளர் எழுத்துப் பூர்வமாக எழுதிக் கொடுங்கள் நடவடிக்கை எடுக் கிறேன் எனக் கூறினார்.

    அதன் பேரில் அவர் எழுத்துப்பூர்வ மாக நகரமைப்பு அலுவலர் மீது புகார் மனு அளித்தார். மேலும் நகராட்சி கவுன்சிலர்கள் சுதா கர், மதன், கோபிநாத். முஜிபுர் ரஹ்மான், சரவணன் நேரில் வந்து நகராட்சித் தலைவர் தற் போது ஈரோடு தேர்தலில் உள் ளதால் வந்தவுடன் நடவ டிக்கை எடுக்க உறுதி அளித்தனர். அதன் பேரில் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.

    ×