search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிப்பறையை அகற்ற வேண்டும்"

    • இக்கழிப்பறையைச் சுற்றிலும் அசுத்தமாகி வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும்படி உள்ளது.
    • கோவிலை சுற்றி உள்ள கட்டிடங்கள் ஆகமவிதிப்படி மட்டுமே இருக்க வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவர் முருகேசன் மற்றும் இந்து முன்னனி நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ராமமூர்த்தியிடம், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி ஊராட்சி காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்பிரமணிய சாமி கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் தைப் பூசத் திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது.

    இந்த கோவிலுக்கு அருகில் அழகான தீர்த்தக்குளம் உள்ளது. இந்த நீரைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் இந்த குளத்தையொட்டி ஊராட்சி சார்பில் பொதுக் கழிப்பறைகள் கட்டி பயன்பாட்டில் உள்ளது.

    இதனால் இக்கழிப்பறையைச் சுற்றிலும் அசுத்தமாகி வருவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும்படி உள்ளது. கோவிலை சுற்றி உள்ள கட்டிடங்கள் ஆகமவிதிப்படி மட்டுமே இருக்க வேண்டும். மத்திய அரசின் வழிபாட்டு பாதுகாப்பு சட்டப்படி புனிதமான இடத்தை கெடுப்பது குற்றமாகும். கோவில் நிலங்கள் கோவில்களுக்கே சொந்தமானது. வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

    எனவே ஆகமவிதிக்கு புறம்பாகவும், சட்டத்திற்கு விரோதமாகவும் கோவில் தீர்த்தகுளத்தையொட்டி கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறை கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×