search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டரிடம் பொதுமக்கள் மனு"

    • ஆதிதிராவிடர் மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
    • மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    இலவச வீட்டுமனை பட்டா வழங்கி மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களில் வீடு கட்டி தர வேண்டும் என்று கலெக்டரிடம் மனுக்களை கொடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சி காந்திநகர் காலனியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

    காந்தி நகர் காலனியில் 50&க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 45 ஆண்டுகளுக்கு ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த எங்களுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும் 4 முதல் 5 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். போதிய இடவசதி இல்லாமல் மிகுந்த சிரமத்துடன் நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.

    டந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அரசு சார்பில் புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி 10-க்கும் அதிகமான மனுக்களை அளித்து உள்ளோம். ஆனால், இதுவரை எங்களது மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அன்றாட கூலி வேலை செய்து வரும் நாங்கள் ஒரே வீட்டில் இடநெருக்கடி வாழ்ந்து வருவதை கருத்தில் கொண்டு, எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே போல், எங்கள் குழந்தைகள் 75&க்கும் அதிகமானவர்கள், தேர்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வி படித்து வருகின்றனர். பள்ளிக்கு சென்று பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தின் வழியாக சென்று வந்தனர். இந்த நிலையில் தனிநபர் ஒருவர், பள்ளிக்கு செல்லும் வழியை அடைத்துவிட்டார். இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு மிகுந்த சிரமத்துடன் மாற்று வழியில் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே, பள்ளிக்கு சென்று தேவையான வழியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது. 

    ×