search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கற்பக விருட்ச வாகனம்"

    • காசிக்கு நிகரான கோவில் என்ற பல்வேறு சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.
    • கற்பகவிருட்ச வாகனம் கோவிலில் புறப்பட்டு நான்கு ரதவீதிவழியாக வலம் வந்தது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் என்ற பல்வேறு சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.

    இந்தநிலையில் கருணாம்பிகா டிரஸ்ட் சார்பாக அவினாசிலிங்கேசுவரருக்கு இலுப்பை, அத்தி, மாவுலிங்கம் ஆகிய மரங்களினால் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மரத்தினால் மயில், கிளி, அன்னப்பறவை, மற்றும் வாழை, மாதுளை, பலா, ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட கனிவகைகளுடன் கூடிய புதிதாக கற்பகவிருட்ச வாகனம் கலைநயத்துடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டது. இந்த புதிய கற்பகவிருட்ச வாகனத்தின் பாலாலயம் மற்றும் வெள்ளோட்ட நிகழ்ச்சி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் நடந்தது. கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சாமிகள், அவினாசி காமாட்சி தாச சாமிகள் ஆகியோர் தலைமையில் நடந்த கற்பகவிருட்ச வாகன வெள்ளோட்டத்திற்கு செங்குந்த ஹோத்ரம் கருணாம்பிகை அம்மன் டிரஸ்ட் தலைவர் ஆண்டவர் ராமசாமி, செயலாளர் குமரேசன், பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கற்பகவிருட்ச வாகனம் கோவிலில் புறப்பட்டு நான்கு ரதவீதிவழியாக வலம் வந்தது. இதில் திரளான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இது குறித்து கருணாம்பிகா டிரஸ்ட் தலைவர் ஆண்டவர் ராமசாமி கூறுைகயில், கடந்த 40 ஆண்டுகளாக அவினாசிலிங்கேசுவரர் தேர்த்திருவிழா நிகழ்ச்சியின்போது டிரஸ்ட் மூலம் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் சாமிகளுடன் கற்பகவிருட்ச வாகனம் ரதவீதிகள் வழியாக வலம்வரும். இதற்கு முன்பு இருந்த கற்பகவிருட்ச வாகனம் பழுதடைந்துபோனதால் டிரஸ்ட் மூலம் புதிதாக கற்பக விருட்ச வாகனம் வடிவமைக்கப்பட்டு தற்போது வெள்ளோட்ட நிகழ்ச்சி நடந்துள்ளது.

    ×