search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணி வெடி"

    • கண்ணிவெடிகள் மற்றும் போரின் போது பொதுமக்கள் மீது வெடிமருந்து தாக்குதல் பற்றிய விழிப்புணர்வு இதன் நோக்கம்.
    • கண்ணிவெடி தாக்குதலால் பொதுமக்களின் வாழ்க்கை, சமூக , பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது.

    ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவை (UNMAS) சார்பில் சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது

    கண்ணிவெடிகள் மற்றும் போரின் போது பொதுமக்கள் மீது வெடி மருந்து தாக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைதியை உருவாக்குதல், தாக்குதலுக்கு உள்ளான ஊனமுற்றோர்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல் இதன் நோக்கம்.

    இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண உலகளாவிய சமூகத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், கண்ணிவெடி தாக்குதல் பிரச்சினை ஒரு முக்கியமான சவாலாக உள்ளது. கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் மற்றும் அமைதியை நிலைநாட்டவும் UNMAS உறுதி கொண்டுள்ளது.

    சர்வதேச சுரங்க விழிப்புணர்வு தினம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது. அதன் கருப்பொருள் என்ன? மற்றும் அதன் வரலாறு நாம் அறிந்து கொள்வது அவசியம்.

    கடந்த 2005 டிசம்பர் -8 ந் தேதி ஐ.நா பொது சபை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4- ந் தேதியை சுரங்க விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கக்கப்படும் என அறிவித்தது. சுரங்கங்கள் மற்றும் போரினால் பொதுமக்கள் கடும் அச்சுறுத்தல் அடைகிறார்கள்.




    இதில் கண்ணிவெடி தாக்குதலில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபை பலவித அறிவுரைகள் வழங்கி வருகிறது. மேலும், கண்ணிவெடி தாக்குதலால் பொதுமக்களின் வாழ்க்கை, சமூக , பொருளாதார வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஐக்கிய நாடுகளின் சுரங்க நடவடிக்கை சேவையின் ( UNMAS )செய்து வருகிறது. உலகம் முழுவதும் பொதுமக்கள் அமைதியாக, பாதுகாப்பாக வாழ உரிய மனிதாபிமான உதவிகளை ஐ.நா. அமைப்பு செயல்படுத்தி வருகிறது.



    சுரங்க விபத்தில் காயமடைந்து உயிர் பிழைத்தவர்கள், கண்ணி வெடியால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேவையான உதவிகள் செய்து இதன் மூலம் உலகில் அமைதியை நிலை நாட்ட பாடுபட்டு வருகிறது.

    இந்த சேவைக்கு 164 நாடுகள் ஒப்புதல் அளித்து உலக அமைதிக்காக ஐ.நா. உடன் பாடுபட்டு வருகின்றன. எனவே இந்நாளில் நாம் அனைவரும் பாதுகாப்பாக வாழ உறுதியேற்போம்.

    ×