search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளாடைகள்"

    • நாம் அணியும் ஆடைகள் நமது தோற்றத்தை மேம்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.
    • பொருத்தமான மற்றும் சரியான உள்ளாடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் அணியும் ஆடைகள் நமது தோற்றத்தை மேம்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் நேர்த்தியான ஆடைகள் அணிவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, பொருத்தமான உள்ளாடைகளை தேர்ந்தெடுப்பதற்கும் கொடுக்க வேண்டும். அணியும் ஆடையின் நிறத்திற்கும், அதன் வடிவத்திற்கும் ஏற்ற வகையில் உள்ளாடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பேக்லெஸ், லோ நெக்லைன், டி-ஷர்ட் ஆப் ஷோல்டர் என பலவிதமான ஆடைகள் உள்ளன. அவற்றுக்கு பொருத்தமான மற்றும் சரியான உள்ளாடைகளை தேர்ந்தெடுப்பதை பற்றிய சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

    டி-ஷர்ட்:

    டி-ஷர்ட், ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியும்போது எவ்விதமான பிராக்களை அணிந்தாலும் பொருத்தமாக இருக்கும். மெல்லிய மற்றும் வெளிர் நிறங்களைக் கொண்ட ரவிக்கைகளை அணியும்போது டிஷர்ட் பிராக்களை அணியலாம்.

    பேக்லெஸ் உடைகள்:

    பேக்லெஸ் அல்லது லோ நெக்லைன் போன்ற நவீன ஆடைகளை அணியும் போது 'ஸ்டிக் ஆன் பிரா அணிந்தால் உங்கள் தோற்றம் மேம்படும். அது மார்பகத்துக்கு இயற்கையான வடிவத்தை கொடுக்கும்.

    ஆப் ஷோல்டர் உடைகள்:

    தோள்பட்டை முழுவதுமாக வெளியே தெரியக்கூடிய உடைகள் அளியும்போது பட்டைகள் இல்லாத பிராக்களை அணியலாம். சற்றே பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் இத்தகைய பிராக்களை தவிர்ப்பது நல்லது.

    ஆழமான 'வி' கழுத்து உடைகள்:

    ஆழமான வி கழுத்து கொண்ட நவீன ஆடைகள் மற்றும் ரவிக்கைகளை அணியும் போது பிளஞ் எனப்படும் ஆழமான கழுத்து கொண்ட பிராக்களை அணிவது பொருந்தமாக இருக்கும்.

    வெள்ளை நிற ஆடைகள்:

    வெள்ளை மற்றும் வெளிர் நிற ரவிக்கைகள் அணியும்போது சரும நிறம் கொண்ட நியூடு பிராக்கள் பொருத்தமாக இருக்கும்.

    ஜிம் உடைகள்:

    உடற்பயிற்சி செய்யும்போது சாதாரண பிராக்கள் அணிவதை தவிர்க்க வேண்டும். அத்தகைய சமயங்களில் அணிவதற்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் 'ஸ்போர்ட்ஸ்' பிராக்களை பயன்படுத்துவது அவசியமானது.

    கவுன் மற்றும் லெகங்கா:

    துப்பட்டா இல்லாத ஆடைகள், கவுன் மற்றும் லெகங்கா போன்ற ஆடைகளை அணியும்போது 'பேடட்" பிராக்கள் அணிந்தால் பொருத்தமாக இருக்கும்.

    திருமண உடை:

    திருமணத்திற்கு அணியும் ஆடைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும் 'பிரைடல்" பிராக்களை திருமணத்தின்போது அணிந்தால் மணமகளின் அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

    ரவிக்கைகள்:

    போட் நெக், ஆங்கில எழுத்து வி மற்றும் யூ வடிவ கழுத்து என அனைத்து வகையான ரவிக்கைகளை அணியும்போதும், மார்பகங்களை முழுவதுமாக முடக்கூடிய 'புல் கப் பிராக்களை அணிவது பொருத்தமாக இருக்கும்.

    ×