search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை மாட்டுவண்டி"

    • சிங்கம்புணரியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இருந்து திருப்பத்தூர் சாலையில் இளங்கோ தேவர் நினைவு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.

    பெரிய மாடு 19 ஜோடிகள் ஒரு பிரிவாகவும் சிறிய மாடு 32 ஜோடிகள் 2 பிரிவுகளாகவும் மொத்தம் 3 பந்தயங்களாக நடத்தப்பட்டன.

    பெரிய மாடு பந்தய எல்லையாக சிங்கம்புணரியில் இருந்து சிலநீர்பட்டி பாலம் வரை 8 மைல் தூரமும், சிறிய மாடு பந்தய எல்லையாக சிங்கம்புணரியில் இருந்து எஸ்.வி.மங்கலம் வரை 6 மைல் தூரமும் நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது.

    எல்லையை நோக்கி பெரிய மற்றும சிறிய மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன. பந்தயத்தை சிங்கம்புணரி, காளாப்பூர், எஸ்.வி.மங்கலம் பொதுமக்கள் அதிகாலையிலேயே சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.

    பந்தயத்தில் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு இளங்கோ தேவர் நினைவுகுழு மற்றும் வண்டிபந்தய இளைஞர்கள் குழு சார்பில் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

    பெரிய மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ. 12ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.9 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.

    சின்ன மாடு பந்தயத்தில் 2 பிரிவுகளாக பந்தயம் நடந்த காரணத்தால் முதல் பரிசு ரூ. 12 ஆயிரத்தை 2 பேருக்கும், 2-ம் பரிசு ரூ.9ஆயிரம் 2 பேருக்கும், 3-ம் பரிசு ரூ.6 ஆயிரம் 2 பேருக்கும், 4-ம் பரிசு ரூ.4 ஆயிரம் 2 பேருக்கும் என மொத்தம் 12 பேருக்கு வழங்கப்பட்டது.

    ×