search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயல்புநிலை"

    தூத்துக்குடி நகரை இயல்பு நிலைக்கு திரும்ப செய்வதே தனது முதல் பணி என்று புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரி கூறினார். #thoothukudi #SandeepNanduri
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தையடுத்து கலெக்டர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

    கலெக்டர் வெங்கடேஷ் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மாநில கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதில் நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடிக்கு புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் சென்னை வடக்கு போக்குவரத்து காவல்துறை துணை கமி‌ஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

    இவருக்கு பதிலாக நீலகிரி மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா தூத்துக்குடிக்கு புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆகியோர் தங்களது அலுவலகங்களில் இன்று காலை பதவியேற்று கொண்டனர்.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி நகரை இயல்பு நிலைக்கு திரும்ப செய்வதே எனது முதல் பணியாகும். தூத்துக்குடியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அரசு விசாரணை கமி‌ஷன் அமைத்துள்ளதால் அதுபற்றி கருத்துக்கூற இயலாது. இந்த சம்பவத்தின் போது பலியானவர்கள், காயம் அடைந்தவர்கள், சேதம் அடைந்த பொது சொத்துக்கள் ஆகிய விபரங்கள் இன்று மாலை வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thoothukudi #SandeepNanduri
    ×