search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயக்குநர் ஞானவேல்"

    • ஜெய் பீம் என்பது வெறும் வார்த்தையல்ல, ஒரு உணர்வு.
    • ஒடுக்கப்பட்டவர்கள், அதிகாரம் பெறும்போது, உண்மையான இலக்கை அது அடையும்.

    கோவாவில் நடைபெற்ற 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பனோரமா பிரிவில் ஜெய் பீம் திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அந்த திரைப்பட இயக்குநர் ஞானவேல் கூறியுள்ளதாவது:

    சட்டச்செயலாக்கம், நீதி பரிபாலனத்தில் உள்ள குறைபாடுகளை துணிச்சலான முறைகளில் படமாக சித்தரித்த ஜெய் பீம் என்பது வெறும் வார்த்தையல்ல அது ஒரு உணர்வு. ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்காக டாக்டர் பி ஆர் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட சொல் அது. 


    ஜெய் பீம் படத்திற்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் கற்பனைக்கு எட்டாத வரவேற்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பிரச்சினை என்பதால், அது அனைவரையும் இணைத்துள்ளது. அநீதிக்கு எதிராக போராட அரசியல் சாசனம் தான் உண்மையான ஆயுதம், அதையேபடத்தில் சித்தரித்துள்ளேன்.

    கல்வி ஒன்றே மக்களை அதிகாரப்படுத்தும் கருவி என்ற அம்பேத்கரின் குரலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான வாழ்க்கையில், ஹீரோக்களுக்கு இடமில்லை. கல்வி மூலம் ஒருவர் தன்னைத் தானே ஹீரோவாக உயர்த்திக் கொள்ளவேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள், அதிகாரம் பெறும்போது தான், என்னுடைய படம் தனது உண்மையான இலக்கை அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து பேசிய ஜெய்பீம் திரை பட இணை தயாரிப்பாளர் கே ராஜசேகர், ஜெய் பீம் வரிசைப் படங்கள் விரைவில் தயாராகும், அதற்கான பணிகள் தொடங்கிவிட்டன என்று தெரிவித்தார்.

    ×