என் மலர்
நீங்கள் தேடியது "இசை சாலை"
- கார் கண்ணாடி மூடப்பட்டிருந்தாலும் கூட, இந்த இசை காருக்குள் இருப்பவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- சாலையில் 'ரம்பிள் ஸ்டிரிப்ஸ்' பயன்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையின் தர்மவீர் பகுதியில் இந்தியாவின் முதல் "மெலோடி சாலை" திறக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் முதல் இசை சாலை திறக்கப்பட்டுள்ளது. தர்மவீர் பகுதியில் உள்ள கடற்கரை சாலையில் அமர்சன்ஸ் கார்டன் முதல் பிரீச் கேண்டி வரையிலான பகுதியில் வாகனங்கள் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, ஏ.ஆர்.ரகுமானின் புகழ்பெற்ற "ஜெய் ஹோ" பாடல் தானாகவே ஒலிக்கும் வகையில் சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சிக்குட்பட்ட இந்த சாலையை நேற்று முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர். ஹங்கேரி நாட்டு நிபுணர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், சாலையை இசைக்கருவிப்போல மாற்றியுள்ளது.
எவ்வாறு சாலையில் ஒலி எழும்பும்?
சாலையில் மின்னணு ஸ்பீக்கர்களுக்குப் பதிலாக 'ரம்பிள் ஸ்டிரிப்ஸ்' பயன்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் மணிக்கு 70–80 கி.மீ. என்ற வேகத்தில் இந்தப் பள்ளங்களின் மீது உருண்டு செல்லும்போது, அதன் உராய்வினால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிர்வுகள் ஒலி அலைகளை உருவாக்கி, எந்தப் பாடல் பொருத்தப்பட்டுள்ளதோ அப்பாடலின் குறிப்பிட்ட இசைப்பகுதி ஒலிக்கும்.
கார் கண்ணாடி மூடப்பட்டிருந்தாலும் கூட, இந்த இசை காருக்குள் இருப்பவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் ஒரு புது அனுபவத்தை தருகிறது. இதன்மூலம் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய உலகின் ஐந்தாவது நகரமாக மும்பை உள்ளது. இதேபோல ஹங்கேரி, ஜப்பான், தென் கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த யோசனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் ஷெவாலேவால் முன்மொழியப்பட்டது.
- மும்பை நரிமண் பாயிண்ட்டில் இருந்து ஓர்லிக்கு செல்லும் கடற்கரை சாலையில் புதிய முயற்சி.
- சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு இசை ஒலிக்கும் கருவிகள் பொருத்தம்.
மும்பை நரிமண் பாயிண்ட்டில் இருந்து ஓர்லிக்கு வடக்கு நோக்கி செல்லும் கடற்கரை சாலையில் ஒரு புதிய முயற்சியாக இந்தியாவிலேயே முதல் முறையாக இசை சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இசை சாலை உலகிலேயே 5-வது சாலையாக விளங்குகிறது.
இசை சாலையை நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஹங்கேரி தூதர் பரன் ஜாரி, சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் செவாலே, மாநகராட்சி கூடுதல் கமிஷனர் அவினாஷ் தக்னே உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பட்னாவிஸ் பேசும் போது, "இந்த கடற்கரை சாலையில் உருவாக்கப்பட்ட இசை சாலை வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும். ஹங்கேரிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட இந்த புதுமையான சாலை, எதிர்காலத்தில் மேலும் செயல்படுத்தப்படும்" என்று அவர் கூறினார்.
இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஒர்லியில் இருந்து நிலத்தடி சுரங்கப்பாதையை விட்டு வெளியேறிய பிறகு நரிமண் பாயிண்ட் வரை சாலையில் 500 மீட்டர் நீளத்திற்கு இசை ஒலிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்போது 'ஜெய் ஹோ' பாடலை வாகனத்தின் உள்ளே கேட்கலாம். இந்த முயற்சி மும்பைவாசிகளின் மனதில் தேசபக்தியை எழுப்புகிறது. சாலை மேற்பரப்பில் குறிப்பிட்ட தூரத்தில் ரம்பிள் பட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இந்த பட்டைகளை கடந்து செல்லும் போது வாகன டயர்களுக்கும், சாலை மேற்பரப்பிற்கும் இடையிலான உராய்வு காரணமாக 'ஜெய் ஹோ' என்ற இசை ஒலி உருவாகிறது.
இதேபோல இசையை ஒலிக்கும் சாலைகள் ஹங்கேரி, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவே முதல் பரிசோதனை முயற்சி ஆகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






