search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலைகள் சீல்"

    • குமாரபாளையத்தில் விதிமுறை மீறி செயல்பட்ட 3 சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • சாய கழிவு நீர் திறந்து விட்டு காவிரி ஆற்றில் வெளியேற்றுவதாக குமாரபாளையத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    பள்ளிப்பாளையம்:

    குமாரபாளையத்தில் விதிமுறை மீறி செயல்பட்ட 3 சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதை கண்டித்து உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையோரம் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் குமாரபாளையத்தில் உள்ள ஒரு சில சாய ஆலைகள் அரசு விதிமுறைகளை மீறி இரவு நேரங்களில் வடிகால் வழியாக சாய கழிவு நீர் திறந்து விட்டு காவிரி ஆற்றில் வெளியேற்றுவதாக குமாரபாளையத்தில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் என்ஜினீயர் மணிவண்ணன் தலைமையிலான அதிகாரிகள், குமாரபாளையத்தில் உள்ள சாய ஆலைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, 3 சாய ஆலைகள் அரசு விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாய ஆலைக்கு விநியோகம் செய்யப்பட்ட மின் இணைப்பு துண்டித்து, சாய ஆலைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×