search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருணாசல பிரதேச எல்லை"

    • கிழக்கு லடாக்கில் இருந்து அருணாசல பிரதேசம் வரையிலான 3488 கி.மீ. நீளமுள்ள எல்லைப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாகவே சிறு சிறு மோதல்கள் நடந்து வருகிறது.
    • 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி கல்வான் பகுதியில் நடந்த மோதலுக்கு பிறகு முதல் முறையாக தற்போது பெரிய அளவில் மோதல் நடந்துள்ளது.

    புதுடெல்லி:

    அருணாசல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 9-ந்தேதி சீன வீரர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் டேசர் துப்பாக்கிகளுடன் அத்துமீறி நுழைந்தனர்.

    இதையடுத்து இந்திய வீரர்கள் அவர்களை எதிர்த்தனர். இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் பலத்த மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து இருதரப்பினரும் அந்த பகுதியில் இருந்து வெளியேறினார்கள். இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்தனர். இந்திய ராணுவத்தினர் 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கவுகாத்தியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சீன தரப்பில் 12 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    கிழக்கு லடாக்கில் இருந்து அருணாசல பிரதேசம் வரையிலான 3488 கி.மீ. நீளமுள்ள எல்லைப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாகவே சிறு சிறு மோதல்கள் நடந்து வருகிறது. ஆனாலும் 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி கல்வான் பகுதியில் நடந்த மோதலுக்கு பிறகு முதல் முறையாக தற்போது பெரிய அளவில் மோதல் நடந்துள்ளது.

    சமீபத்தைய மோதலுக்கு பிறகு அந்த பகுதியில் பரஸ்பரம் அமைதியை நிலை நாட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக இந்திய கமாண்டர், சீன அதிகாரியுடன் கொடி சந்திப்பு பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    மேலும் தவாங் பகுதியில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை முறியடிக்க அங்கு இந்தியா அதிக எண்ணிக்கையிலான வீரர்களை நிறுத்தி உள்ளது.

    ×