search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு"

    சென்னை சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



    புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டியதையடுத்து, 17 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் மீண்டும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் சிறையில் உள்ள 17 பேருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் 17 பேரும் ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெற முடியாது. சிறைவாசம் அனுபவித்தாக வேண்டும். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை அயனாவரம் சிறுமி வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.



    அதன்பின்னர் புழல் சிறையில் கைதிகள் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னை சீரழித்த நபர்களை அடையாளம் காட்டினார். இதையடுத்து குற்றவாளிகள் 17 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.

    போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் அனைவரும் இன்று மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதேசமயம் நீதிமன்றக் காவலும் முடிவடைந்தது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #ChennaiGirlHarassment #POCSOAct
    ×