என் மலர்
செய்திகள்

அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு - 17 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
சென்னை அயனாவரம் சிறுமி வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #ChennaiGirlHarassment #POCSOAct
சென்னை:

அதன்பின்னர் புழல் சிறையில் கைதிகள் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னை சீரழித்த நபர்களை அடையாளம் காட்டினார். இதையடுத்து குற்றவாளிகள் 17 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் அனைவரும் இன்று மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதேசமயம் நீதிமன்றக் காவலும் முடிவடைந்தது. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #ChennaiGirlHarassment #POCSOAct
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

Next Story