search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா குற்றச்சாட்டு பதிவு"

    அமெரிக்க அரசு தொடர்பான அதிமுக்கிய ரகசியங்களை விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தின் மூலம் அம்பலப்படுத்திய ஜுலியன் அசாஞ்சே மீது வாஷிங்டன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. #JulianAssange #WikiLeaks
    வாஷிங்டன்:

    அமெரிக்க அரசின் அதிமுக்கிய ரகசியங்களை ‘விக்கிலீக்ஸ்’ எனப்படும் இணையதளம் கடந்த 2010-ம் ஆண்டில் வெளியிட்டது. இதையடுத்து, அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ‘விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே, லண்டன் நகரில் உள்ள ஈக்வேடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    ஸ்வீடன் நாட்டில் ஒரு இளம்பெண்ணை கற்பழித்ததாக ஜுலியன் அசாஞ்சே மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, விசாரணை நடத்திய போலீசார் லண்டனில் தங்கியுள்ள அசாஞ்சே-வுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்தனர்.



    இந்நிலையில், தங்களது நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே மீது வாஷிங்டன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ‘விக்கிலீக்ஸ்’ உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தன்மை என்ன? என்பது தொடர்பான விரிவான தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. #JulianAssange #WikiLeaks
    ×