search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரி காலில் விழுந்து கதறி அழுத விவசாயி"

    • நிலத்திற்கு செல்லும் வழி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார்
    • அதிகாரிகள் விசாரணை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் தமிழக கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் துறை ஆணையர் பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் வட்ட வழங்கல் பட்டா மற்றும் ஆக்கிரமிப்பு நிலஅளவை பிரிவு கணினி பிரிவு உள்ளிடவைகளை நேரில் சென்று கோப்புகளை பார்வையிட்டு நிலுவையில் உள்ள மனுக்களின் தன்மைகள் கேட்டறிந்தார்.

    இதனையடுத்து கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் துறை ஆணையர் பிரபாகரன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டிருந்தார். அப்போது ஆரணி அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்த விவசாயி அரிகிருஷ்ணன் என்பவர் மனுக்கள் அளித்து திடீரென அதிகாரியின் காலில் விழுந்து கதறி அழுதார்.

    இதனை கண்ட அதிகாரி பிரபாகரன் காலில் விழுவது தவறு என்று கூறி கோப்புகளை ஆய்வு செய்ய அறைக்கு சென்று விட்டார்.

    பின்னர் சம்பந்தப்பட்ட விவசாயி அரிகிருஷ்ணனை அழைத்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.

    மேலும் இச்சம்பவம் குறித்து விவசாயி அரிகிருஷ்ணன் கூறியதாவது:-

    கனிகிலுப்பை கிராமத்தில் 2ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும் விவசாய நிலத்திற்கு செல்லும் வழியை அதே கிராமத்தை சேர்ந்த நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் விவசாயம் பெரியளவில் பாதிக்கப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம் காவல்துறை வருவாய் துறை ஆகியோரிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை இதனால் ஆய்வுக்கு வந்த அதிகாரியிடம் மனு அளித்து வேறுவழியின்றி அதிகாரியின் காலில் விழுந்து கதறி அழுதேன் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆரணி தாசில்தார் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீகுளிக்க போவதாக விவசாயி வேதனையுடன் தெரிவித்தார்.

    ஆரணி தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வுக்கு வந்த அதிகாரி காலில் விழுந்து விவசாயி கதறி அழுத சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ×