search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகில இந்திய ஹாக்கி"

    • ரெயில்வே அணி இந்தப் போட்டி தொடரில் தோல்வி அடையவில்லை.
    • மற்றொரு ஆட்டத்தில் ராணுவம்- கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

    சென்னை:

    94-வது எம்.சி.சி- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. ஒரு போட்டியில் நடப்பு சாம்பியன் ஐ.ஓ.சி. (இந்தியன் ஆயில் நிறுவனம்) 2-6 என்ற கோல் கணக்கில் மத்திய தலைமை செயலகத்திடம் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறியது.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவம் 6-0 என்ற கோல் கணக்கில் இந்திய விமானப்படையை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

    நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த ரெயில்வே- பி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்த பஞ்சாப் நேஷனல் வங்கி ( பி.என்.பி.) அணிகள் மோதுகின்றன.

    ரெயில்வே அணி இந்தப் போட்டி தொடரில் தோல்வி அடையவில்லை. இதனால் அந்த அணி வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றுள்ளது. இறுதிப்போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும்.

    நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில். பி பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்திய ராணுவம்-ஏ பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்த கர்நாடகா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்று இருந்தன.

    • இந்திய ராணுவ அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
    • இந்திய கடற்படை அணி முதல் 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

    சென்னை:

    94-வது எம்.சி.சி- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 5-வது நாள் போட்டிகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.) அணி 4-3 என்ற கோல் கணக்கில் கர்நாட காவையும், பஞ்சாப் நேஷனல் வங்கி 1-0 என்ற கணக்கில் இந்திய விமானப் படையையும் தோற்கடித்தன.

    இன்று மாலை 4.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சி.ஏ.ஜி. (தணிக்கை துறை அலுவலகம்) அணிகள் மோதுகின்றன.

    சி.ஏ.ஜி. அணி தொடக்க ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் தமிழகத்துடன் டிரா செய்தது. 2-வது போட்டியில் 6-2 என்ற கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியையும், 3-வது ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் இந்திய விமானப்படையை தோற்கடித்தது. அந்த அணி இந்திய ராணுவத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    இந்திய ராணுவ அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்திய கடற்படை மத்திய தலைமை செயலக அணிகள் மோதுகின்றன.

    இந்திய கடற்படை அணி முதல் 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.

    மத்திய தலைமை செயலக அணியும் முதல் 2 போட்டியில் தோற்று இருந்தது. அந்த அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    ×