search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hardik Singh"

    • ஹர்திக் சிங்கிற்கு பதிலாக மாற்று வீரர் ராஜ் குமார் பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா நாளை எதிர்கொள்கிறது.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் விளையாடியது. அப்போது இந்திய அணியின் நடுக்கள வீரர் ஹர்திக் சிங்கின் (வயது24) தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த காயம் குணமடையாததால் அவர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் ராஜ் குமார் பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    டி பிரிவு லீக் சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் 7 புள்ளிகளுடன் சமநிலை பெற்றிருந்தன. ஆனால் கோல்கள் அடிப்படையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி 2வது இடத்தை பெற்றது. எனவே, காலிறுதியை உறுதி செய்வதற்கான கிராஸ்ஓவர் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா நாளை எதிர்கொள்கிறது. தற்போது முன்னணி வீரர் ஹர்திக் சிங் காயம் காரணமாக விலகியிருப்பது, இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயினுக்கு எதிராக இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஹர்திக் தனி ஆளாக அற்புதமான கோல் அடித்தார். வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×