search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world Sanskrit meet"

    கனடாவில் நடைபெறும் 17-வது உலக சமஸ்கிருத மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நாளை தொடங்கி வைக்கிறார்.
    புதுடெல்லி :

    கனடா நாட்டில் 17-வது உலக சமஸ்கிருத மாநாடு இம்மாதம் 9-ம் தேதி முதல் வரும் 13-ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தொடங்கி வைப்பார் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலும் 40 நாடுகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட சமஸ்கிருத அறிஞர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.



    வேத காலத்தில் பெண்களின் கல்வி, சமஸ்கிருத புத்தமத புத்தகங்கள், யாகசலாவிற்கு அப்பால் மிம்சா, பகவத புராண அறிமுகம் போன்றவை மாநாட்டில் உரையாற்ற உள்ள குறிப்பிடத்தக்க தலைப்புகள் ஆகும்.

    மந்திரி பிரகாஷ் ஜவடேகருடன் இந்தியாவை சேர்ந்த 10 சமஸ்கிருத அறிஞர்களும் மற்றும் இரண்டு அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

    உலக மக்களிடையே சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் மற்றும்  பயிற்சி செய்யவும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக சமஸ்கிருத மாநாடு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    ×