search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workers demand"

    • அமைச்சர் பெருமக்கள் பல அரசியல் தலைவர்கள் பல சங்கத்தின் தோழர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    • ஒரே நோக்கம் கூலி தொழிலாளர்கள் தொழிலை அமைப்புசாரா பட்டியலில் இணைத்திட வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

    சென்னை:

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் சங்கத்தின் 20-ம் ஆண்டு விழா திருப்பூரில் நாளை மறுதினம் நடக்கிறது.

    இதையொட்டி சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நிலத்தரகர் தொழில் செய்யும் தொழிலாளர்கள் நலன் காக்க அவர்கள் பெற வேண்டிய நிலத்தரகர் கமிஷன் தொகையை சுமூகமாக பெற்றிட கடந்த 24.10.2004 அன்று தமிழ் திருநாடு நிலம், வீடு மனை தரகர்கள் நலச்சங்கம் என்ற பெயரில் சென்னை விருகம்பாக்கத்தில் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வாங்குபவர்களுக்கும், விற்பவர்களுக்கும் பாலமாக இருந்து நிலத்தரகு தொழிலாளர்கள் செயல்படுகிறார்கள்.

    எல்லா தொழிலுக்கும் வேலை முடித்தால் உடனே ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனல் நிலத்தரகு தொழில் செய்யும் கூலி நிலத்தரகர்களுக்கு எப்பொழுது ஊதியம் வரும் என்ற நிலையான கால அவகாசமே இல்லை. ஆண்டுதோறும் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் மாநாடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. எங்களது ஒரே நோக்கம் கூலி தொழிலாளர்கள் தொழிலை அமைப்புசாரா பட்டியலில் இணைத்திட வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

    வருகிற 3-12-2023 அன்று திருப்பூரில் நமது சங்கத்தின் சார்பாக 20-ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் பெருமக்கள் பல அரசியல் தலைவர்கள் பல சங்கத்தின் தோழர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தொழிலாளர்கள் கூலி நிலத்தரகர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×