search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "west indies needs 302 runs against bangadesh in third oneday match"

    செயிண்ட் கிட்சில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 18 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற வங்காள தேசம் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. #WIvBAN
    செயிண்ட் கிட்ஸ்:

    வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசமும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக
    தமிம் இக்பாலும், அனமுல் ஹக்கும் களமிறங்கினர்.

    அனமுல் 10 ரன்னிலும், ஷகிப் அல் ஹசன் 37 ரன்னிலும் முஷ்பிகுர் ரஹிம் 12 ரன்னிலும் அவுட்டாகினர். நிதானமாக ஆடிய தமிம் இக்பால் சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய மகமதுல்லா 67 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஜேசன் ஹோல்டர், ஆஷ்லி நர்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின்  லெவிசும் இறங்கினர்.

    லெவிஸ் 13 ரன்னிலும், கெயில் 73 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ஷா ஹோப் 64 ரன்னிலும், ரோவ்மன் பாவெல் 74 ரன்னும் எடுத்தனர்.

    மற்றவர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 283 ரன்களுக்கு எடுத்து தோல்வி அடைந்தது. 
      
    இந்த வெற்றி மூலம் வங்காளதேசம் அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. #WIvBA
    ×