என் மலர்
நீங்கள் தேடியது "Virudhunagar youth missing"
விருதுநகர்:
விருதுநகர் சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 32). இவருக்கும் மல்லிபுதூர் பகுதியைச் சேர்ந்த முத்துச்செல்வி (23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர் கருப்பசாமி தம்பதியர் திருப்பூரில் வேலை செய்யச் சென்றனர். அங்கு தங்கி வேலை பார்த்த நிலையில் போதிய வருமானமின்றி சொந்த ஊர் திரும்பி விட்டனர்.
பிறகு கருப்பசாமி மீண்டும் திருப்பூர் செல்ல திட்டமிட்டார். மனைவி முத்துச் செல்வியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு கருப்பசாமி மட்டும் திருப்பூர் சென்றார்.
அதன் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால் முத்துச்செல்வி கணவரை தேடிச் திருப்பூர் சென்றார். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் திரும்பிய முத்துச்செல்வி ஆமத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கருப்ப சாமியை தேடி வருகின்றனர்.






