என் மலர்

  நீங்கள் தேடியது "Vehicle Convoy"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான சங்கன் 55 தானியங்கி கார்களை கொண்டு அதிக தூரம் அணிவகுப்பு நடத்தி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. #AutonomousCar  சீனாவை சேர்ந்த சங்கன் ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்த ஆண்டு நீண்ட தூர வாகன அணிவகுப்பை மேற்கொண்டமைக்கு புதிய சாதனை படைத்திருக்கிறது. இந்த சாதனை சங்கன் நிறுவனத்தின் தியான்ஜியாங் ஆலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி நடத்தப்பட்டது.

  துவக்கத்தில் சங்கன் நிறுவனம் 56 வாகனங்களை கொண்டு அணிவகுப்பு நடத்த திட்டமிட்டது. எனினும், அணிவகுப்பில் பங்கேற்ற ஒரு காரின் ஓட்டுனர் வாகனத்தை இயக்க முற்பட்டதால், ஒரு வாகனம் நீக்கப்பட்டு விட்டது. சங்கன் நிறுவனத்தின் 55 தானியங்கி கார்கள் சுமார் 3.2 கிலோமீட்டர் தூரத்தை சீராக கடந்தது.

  முன்னதாக இதே நிறுவனம் தானியங்கி கார்களை கொண்டு அதிக தூரத்தை கடந்த சாதனை படைத்தது. சாதனை படைத்த மறுநாளே சங்கன் நிறுவனம் தனது சாதனையை முறியடத்திருக்கிறது.  3.2 கிலோமீட்டர் தூரத்தை 56 தானியங்கி கார்கள் வெறும் 9 நிமிடங்கள் 7 நொடிகளில் அணிவகுத்து கடந்திருக்கின்றன. அணிவகுப்பில் தானியங்கி கார்கள் அதிகபட்சம் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தன. 

  சங்கன் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தானியங்கி கார் பொறியாளரான யாங் குவோ, "சாதனையின் போது தானியங்கி கார்களில் அமர்ந்து இருந்த ஓட்டுனர்களுக்கும், ஆட்டோபைலட் சிஸ்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதனால் எங்களது சிஸ்டத்தின் மீது ஓட்டுனர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும்" என தெரிவித்தார். 

  கின்னஸ் சாதனையில் பங்கேற்ற கார்கலில் சங்கன் ஆட்டோமொபைல் நிறுவனம் சில மாற்றங்களை செய்தது. முதற்கட்டமாக பொறியாளர்கள் தானியங்கி கார்களின் சென்சார்களை மாற்றம் செய்து பாதையில் இருக்கும் தடைகளை மிக எளிதில் கண்டறிந்து கொள்ளும் படி மாற்றப்பட்டது.
  ×